search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹெலிகாப்டர் விபத்து"

    • ஹெலிகாப்டர் போர்பந்தருக்கு அப்பால் அரபிக்கடலில் விழுந்ததில் மூன்று பேர் காணாமல் போயினர்.
    • காணாமல் போன பைலட் ராகேஷ் குமார் ராணாவை தேடும் பணி தொடர்ந்தது.

    அமகதாபாத்:

    இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கடந்த மாதம் குஜராத் கடற்கரையில் அரபிக்கடலில் விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரை இயக்கிய விமானி மாயமானார். ஹெலிகாப்டர் விபத்தில் காணாமல் போன கடலோர காவல்படை விமானியின் உடல் ஒரு மாதத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த மாதம் 2-ந்தேதி ALH MK-III ஹெலிகாப்டர் போர்பந்தருக்கு அப்பால் அரபிக்கடலில் விழுந்ததில் மூன்று பேர் காணாமல் போயினர். இதில் இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போன பைலட் ராகேஷ் குமார் ராணாவை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    ராணாவின் உடல் போர்பந்தருக்கு தென்மேற்கே 55 கிமீ தொலைவில் கடலில் இருந்து நேற்று மீட்கப்பட்டது என்று கடலோர காவல்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஒரு விமானி மற்றும் இரண்டு இன்ஜினீயர்கள் உடன் அருகில் உள்ள ஹெபேடில் இருந்து புறப்பட்டது
    • விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் என்.சி.பி கட்சியினுடையது என்று தெரியவனத்துளது.

    மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. புனே மாவட்டத்தில் உள்ள பவ்தன் [Bavdhan] பகுதியில் உள்ள மலைப்பாங்கான இடத்தில் இன்று [அக்டோபர் 2] அருகில் உள்ள ஹெலிபேடில் இருந்துஒரு விமானி மற்றும் இரண்டு இன்ஜினீயர்கள் உடன் புறப்பட்ட ஹெலிகாப்டர் காலை 6.45 மணியளவில் பனிமூட்டம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து விழுந்து தீப்பிடித்திடுத்துள்ளது.

    இந்த விபத்தில் மூவரும் உயிரிழந்தாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் என்.சி.பி கட்சியினுடையது என்றும் புனேவில் இருந்து மும்பையை நோக்கி அந்த ஹெலிகாப்டர் புறப்பட்டுள்ளது என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள போலீஸ் நிலைமை குறித்து ஆராய்ந்து வரும் நிலையில் விபத்து தொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளது.

    • ராணுவ வீரர்கள் 8 பேர் ஹெலிகாப்டர் ஒன்றில் நிவாரண பணி ஒன்றை மேற்கொள்வதற்காக புறப்பட்டு சென்றனர்.
    • ஜனாதிபதி கஸ்டாவோ பெட்ரோ அவருடைய எக்ஸ் சமூக ஊடக பதிவில் பகிர்ந்து உள்ளார்.

    கொலம்பியாவில் ஹெலிகாப்டர் விபத்தில் 8 ராணுவ வீரர்கள் உயிரழந்துள்ளனர். 

    வெனிசுலா நாட்டு எல்லையையொட்டிய பகுதியில், கொலம்பியா நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் 8 பேர் ஹெலிகாப்டர் ஒன்றில் நிவாரண பணி ஒன்றை மேற்கொள்வதற்காக புறப்பட்டு சென்றனர்.

    அப்போது அந்த ஹெலிகாப்டர் குமரிபோ என்ற நகராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதியில் திடீரென விபத்தில் சிக்கியது. இதில், ஹெலிகாப்டரில் பயணித்த ஒருவரும் தப்பவில்லை. இந்த விபத்தில், ராணுவ வீரர்கள் 8 பேரும் உயிரிழந்து உள்ளனர்.

    இதனை அந்நாட்டின் ஜனாதிபதி கஸ்டாவோ பெட்ரோ அவருடைய எக்ஸ் சமூக ஊடக பதிவில் பகிர்ந்து உள்ளார். எனினும், விபத்து எப்போது நடந்தது போன்ற விவரங்களை வெளியிடவில்லை.

    • ஈரான் முன்னாள் அதிபர் இப்ராகிம் ரெய்சி கடந்த மே மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
    • மோசமான வானிலையால் விபத்து நிகழ்ந்தது என அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்தது.

    டெஹ்ரான்:

    மறைந்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரெய்சி கடந்த மே மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருடன் வெளியுறவு மந்திரி உசைன் அமீர் அப்துல்லாயன் உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர். கடும் பனி சூழ்ந்த வானிலை காரணமாக விபத்து நிகழ்ந்தது என அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்தது.

    இதற்கிடையே, லெபனானில் கடந்த வாரம் பேஜர் மற்றும் வாக்கி டாக்கி கருவிகளால் ஏற்பட்ட வெடிப்பு சம்பவங்களில் சுமார் 40 பேர் பலியாகினர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், ஈரான் முன்னாள் அதிபரான இப்ராகிம் ரெய்சியும் பேஜர் ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளார் என அந்நாட்டு எம்.பி.யான அகமது பக்ஷயேஷ் அர்தேஸ்தானி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அகமது கூறுகையில், ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி ஒரு பேஜரை பயன்படுத்தினார். அவர் பயன்படுத்திய பேஜரின் வகை ஹிஸ்புல்லா படைகளிடம் இருந்து வேறுபட்டதாக இருக்கலாம். இருப்பினும், ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான சாத்தியமான காட்சிகளில் ஒன்று அவரது பேஜர் வெடித்திருக்கலாம். பேஜர்களை வாங்குவதில் ஈரான் பங்கு வகித்துள்ளது. ஈரானியப் படைகள் நிச்சயமாக ஹிஸ்புல்லாக்கள் பேஜர்களை வாங்குவதில் ஒரு பங்கைக் கொண்டிருந்தது. எனவே, எங்கள் சொந்த புலனாய்வு அமைப்புகளும் இந்த விஷயத்தை விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் யாருக்கும் காயமில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
    • விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் முன்பு கேதார்நாத் கோவிலுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

    பழுதடைந்த தனியார் ஹெலிகாப்டர் ஒன்றை, இந்திய விமானப்படையில் பழுதுபார்ப்பதற்காக கௌச்சர் விமான ஓடுளத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இன்று காலை பாதுகாப்புப் படைகளின் MI-17 ஹெலிகாப்டரில் பழுதடைந்த தனியார் ஹெலிகாப்டர் கொண்டு செல்லப்பட்டது.

    அப்போது, நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அதிக எடை மற்றும் அதிவேக காற்று காரணமாக MI-17 ஹெலிகாப்டர் சமநிலையை இழக்கத் தொடங்கியது. இதனால், விபத்தை தவிர்க்க ஹெலிகாப்டர் கீழே இறக்கிவிடப்பட்டது. அது லிஞ்சோலியில் உள்ள மந்தாகினி ஆற்றின் அருகே விழுந்து விபத்துக்குள்ளானது.

    ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் யாருக்கும் காயமில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் முன்பு கேதார்நாத் கோவிலுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    • ஐதராபாத் நோக்கி சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலையால் விபத்தில் சிக்கியது.
    • ஹெலிகாப்டரில் பயணித்த 4 பேரில், கேப்டனுக்கு மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்தின் பாட் கிராமத்தில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

    மும்பையில் இருந்து ஐதராபாத் நோக்கி சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலையால் விபத்தில் சிக்கியது.

    இந்த விபத்தில், ஹெலிகாப்டரில் பயணித்த 4 பேரில், கேப்டனுக்கு மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது.

    கேப்டன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    • ஹெலிகாப்டர் இன்று பிற்பகலில் நுவாகோட்டின் ஷிவ்புரி பகுதியில் விபத்துக்குள்ளானது.
    • ஹெலிகாப்டர் புறப்பட்ட மூன்று நிமிடங்களில் தொடர்பை இழந்து விபத்துக்குள்ளானது.

    நேபாளம், காத்மாண்டுவில் இருந்து ரசுவா நோக்கி சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    ஏர் பைனஸ்டி என்கிற ஹெலிகாப்டர் இன்று பிற்பகலில் நுவாகோட்டின் ஷிவ்புரி பகுதியில் விபத்துக்குள்ளானது.

    இந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.

    இதுதொடர்பாக வெளியான அறிக்கையின்படி, ஹெலிகாப்டர் காத்மாண்டுவில் இருந்து ரசுவா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சூர்யா சவுர்-7 என்ற மலையில் மோதியுள்ளது.

    விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், அதிகாரிகள் மீட்புக் குழுவை சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், ஹெலிகாப்டர் காத்மாண்டுவில் இருந்து பிற்பகல் 1:54 மணிக்கு புறப்பட்டதாகக் கூறப்படுகிறது. சூர்யா சவுரை அடைந்த பிறகு, ஹெலிகாப்டர் அதிகாரிகளுடனான தொடர்பை இழந்தது. ஹெலிகாப்டர் புறப்பட்ட மூன்று நிமிடங்களில் தொடர்பை இழந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது

    இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள ஜோல்பா நகருக்கு அருகே மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.
    • ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது உண்மை தான் என்றும், தாக்குதலுக்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் கடந்த வாரம் தெரிவித்தது.

    டெஹ்ரான்:

    ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி, கடந்த மாதம் 19-ந் தேதி அண்டை நாடான அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக அங்கு சென்றார்.

    பின்னர் அவர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் ஈரானுக்கு புறப்பட்ட நிலையில், ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள ஜோல்பா நகருக்கு அருகே மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.

    இதில் அதிபர் இப்ராஹிம் ரைசி, ஈரான் வெளியுறவு மந்திரி உசைன் அமீர் அப்துல்லாஹியன் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    ஈரான்-இஸ்ரேல் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்ததால் இது உண்மையில் விபத்தா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலா என்கிற கேள்வி எழுந்தது.

    இந்த சூழலில் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஈரான் ஆயுத படைகளின் தலைமை, ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது உண்மை தான் என்றும், தாக்குதலுக்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் கடந்த வாரம் தெரிவித்தது.

    இந்த நிலையில் அதிபர் இப்ராஹிம் ரைசி பலியான ஹெலிகாப்டர் விபத்தின் பின்னணியில் நாசவேலை எதுவும் இல்லை என ஈரான் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    ஹெலிகாப்டரில் குண்டு வெடித்து இருக்கலாம் என்று எழுந்த யூகங்களுக்கு ஈரான் அரசு இவ்வாறு பதிலளித்துள்ளது.

    இதுதொடர்பாக ஈரான் ஆயுத படைகளின் தலைமை வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "ஹெலிகாப்டரின் சிதைவுகள் மற்றும் மீதமுள்ள பாகங்கள் மற்றும் சம்பவம் நடந்த இடத்தில் சிதைவுகள் சிதறிக் கிடந்த விதம் ஆகியவற்றின் சோதனை முடிவுகளை பார்க்கும்போது ஹெலிகாப்டரில் நாசவேலை குண்டு வெடிப்பு எதுவும் நிகழவில்லை என்பது உறுதியாகி உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இப்ராஹிம் ரைசியுடன் பயணம் செய்த வெளியுறவு அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது.
    • விபத்து நடந்த அஜர்பைஜானை ஒட்டியுள்ள ஜல்பா நகர் மலைப்பகுதியில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

    ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார். அவருடன் சென்றவர்களும் உயிரிழந்ததாக அந்நாட்டு மக்களுக்கு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இப்ராஹிம் ரைசியுடன் பயணம் செய்த வெளியுறவு அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது.

    விபத்து நடந்த அஜர்பைஜானை ஒட்டியுள்ள ஜல்பா நகர் மலைப்பகுதியில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

    ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.

    • ஈரான் அதிபருடன் ஹெலிகாப்டரில் சென்ற அந்நாட்டு அமைச்சர்கள் இருவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஈரானின் அடுத்த அதிபராக அந்நாட்டின் துணை அதிபர் முகமது முக்பர் பதவியேற்க உள்ளார்.

    ஈரான் நாட்டின் அதிபராக இருப்பவர் இப்ராஹிம் ரைசி. இவர் அண்டை நாடான அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக நேற்று அங்கு சென்றார். அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் அணை திறப்பு விழாவில் கலந்துகொண்ட இப்ராஹிம் ரைசி, அதன் பின்னர் ஹெலிகாப்டரில் ஈரானுக்கு புறப்பட்டார்.

    அவருடன் ஈரான் வெளியுறவு மந்திரி உசைன் அமிரப்டோலாஹியன் மற்றும் மூத்த அதிகாரிகள் சிலர் ஹெலிகாப்டரில் பயணித்தனர்.

    ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அஜர்பைஜான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஜோல்பா நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.

    மிக மோசமான நிலையில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியும் உடன் சென்றவர்களும் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

    இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் உயிரிழந்ததாக அந்நாட்டு மக்களுக்கு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஈரானில் உள்ள புனித தலமான இமாம் ரேஸாவில் வைத்து மரணம் அறிவிக்கப்பட்டது. 

    முற்றிலும் உருக்குலைந்த நிலையில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டது. ஈரான் அதிபருடன் ஹெலிகாப்டரில் சென்ற அந்நாட்டு அமைச்சர்கள் இருவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரானின் அடுத்த அதிபராக அந்நாட்டின் துணை அதிபர் முகமது முக்பர் பதவியேற்க உள்ளார். 50 நாட்களுக்குள் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் வரை, தற்காலிக அதிபராக முகமது முக்பர் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சையத் இப்ராஹிம் ரைசி மறைவால் ஆழ்ந்த வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்.
    • இந்தியா - ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்.

    புதுடெல்லி:

    ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார். அவருடன் சென்றவர்களும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என ஈரான் தகவல் தெரிவித்துள்ளது. 

     இப்ராஹிம் ரைசி

     இப்ராஹிம் ரைசி

    இதையடுத்து முகமது முக்பர் ஈரான் நாட்டின் புதிய அதிபராகிறார். ஈரான் நாட்டின் புதிய காபந்து அதிபராக துணை அதிபர் முகமது முக்பர் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.

    இந்நிலையில் ஈரான் அதிபர் சையத் இப்ராஹிம் ரைசி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில்,

    சையத் இப்ராஹிம் ரைசி மறைவால் ஆழ்ந்த வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன். இந்தியா - ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்.

    சையத் இப்ராஹிம் ரைசியின் குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் துணை நிற்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    • ஈரான் நாட்டின் புதிய காபந்து அதிபராக துணை அதிபர் முகமது முக்பர் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.
    • ஈரான் அரசியல் சாசனத்தின்படி 50 நாட்களுக்குள் புதிய அதிபர் தேர்வு செய்யப்பட வேண்டும்.

    ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அஜர்பைஜான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஜோல்பா நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.

    இந்நிலையில் மிக மோசமான நிலையில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்திருக்கலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என ஈரான் தொலைக்காட்சி தகவல் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் ஈரான் நாட்டின் புதிய அதிபராகிறார் முகமது முக்பர். ஈரான் நாட்டின் புதிய காபந்து அதிபராக துணை அதிபர் முகமது முக்பர் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.

    ஈரான் அரசியல் சாசனத்தின்படி 50 நாட்களுக்குள் புதிய அதிபர் தேர்வு செய்யப்பட வேண்டும். இதையடுத்து புதிய அதிபராக முகமது முக்பர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    ×